வாழைப்பூவின் மகத்துவம்


     வாழையின் ஒவ்வொரு பகுதியும்(பூ, இலை,காய்,கனி,தண்டு,நீர்) மனிதர்களுக்கு பெருமளவில் பயன்படும் ஒரு அற்புத மரமாகும். இதன் மருத்துவ குணங்கள் "மனிதர்களை நோய்களில் இருந்து காத்து வாழ வைக்கும் தன்மை கொண்டதால் வாழை "என்று பெயர் பெற்றது போலும். இதில் உள்ள முக்கிய வேதிப்பொருட்கள் பாஸ்பரஸ் ,கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னிசியம், இரும்புச்சத்து.....

பயன்கள்:

*இயற்கையாகவே  நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. இதில் எத்தனால் ( Ethanol) இருப்பதால் இது நம் உடலில் நோய் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

*இதை உணவாக சமைத்து உண்ண பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் அதிக இரத்த போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.

*இதில் மெக்னீசியம் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்க உதவும் (antidepressant)

*அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் தோன்றும் ஆபத்தைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்க பயன்படும் .

*பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.

*சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும். சிறுநீரக கற்களை கரைக்க உதவும் இயற்கை மருந்தாகும்.

*சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்க உதவும்.

*இரத்தத்தில் இரும்புச் சத்தினை அதிகரித்து இரத்தசோகை நோயை குணப்படுத்த உதவும்.

*வயிற்று சம்மந்தப்பட்ட செரிமான கோளாறு, வயிற்றுப்புண், வயிற்றுவலி ஆகியவைகளுக்கு ஒரு சிறந்த பரிகாரமாகும்.

*அதிக நார்ச்சத்து கொண்ட ஒரு பொருள் என்பதால் மலச்சிக்கலை( constipation)  போக்கும் மலமிளக்கியாக (laxative) பயன்படும்.

*ஆண்களின் புரஸ்தகோள வீக்கம் (prostate enlargement) குணப்படுத்த பயன்படும்.

*முடி வேர்களை பலமாக்கி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

*இதில் வைட்டமின் A,E,C , பொட்டாசியம் மற்றும் கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவும். ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) வராமல் பாதுகாக்கும்

*விந்தணுக்கள் அதிகரிக்க உதவும்.

*இரத்தமூலம் , இருமல், கைகால் எரிச்சல், பிரமேகம் , வெட்டை ஆகிய நோய்கள் தீரும்.

குறிப்பு:

**வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி கை, கால் எரிச்சலுக்கு ஒற்றடமிடலாம் அல்லது அதனை வைத்து கட்டலாம்.

**பெரும்பாடு என்னும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தபோக்கிற்கு ( Menorrhagia - increased menstrual bleeding) இதனை ஆவியில் வேகவைத்து பிழிந்து சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம்.

மேலும் வாழைப்பூ சேரக்கூடிய சித்த மருந்துகள் உள்ளன. அதனை உங்கள் சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மேற்கொண்டு பயன்பெறலாம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாம்பூலம் தரித்தல்