இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாம்பூலம் தரித்தல்

படம்
      தாம்பூலம் தரித்தல் என்பது நம் நாட்டின் பாரம்பரியத்தில் முக்கியமான ஒன்றாகும். வெற்றிலை , பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உட்கொள்வது தாம்பூலம் எனப்படும். அவ்வாறு எடுத்துக்கொள்வதால் நாம் பெறும் நன்மைகள் பல. அதனால் தான் அக்காலம் முதல் இன்று வரை நம் நாட்டின் ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளிலும் தாம்பூலம் கொடுப்பது ஒரு வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு பெருமை வாய்ந்த இத் தாம்பூலம் எவ்வாறு மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்ப்போம். * வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு தவிர தாம்பூலத்தில் சேரும் வேறு பொருட்கள்:      ஏலம் (cardamom)      கிராம்பு (cloves)      வால்மிலகு(tail-pepper)      சாதிக்காய் (nut meg)     சாதிப்பத்திரி ( mace)      சுக்கு (dried ginger)      காய்ச்சுக்கட்டி  பயன்படுத்தப்படும் பொருட்களும் அதன் நன்மைகளும்: பொதுவாக தாம்பூலம் தரிப்பதால் கிருமி, கபம், தாகம் , பல்நோய் தீரும் என்பர். பசியை தூண்டும், சுக்கில விருத்தி உண்டாகும், நுண்ணறிவு மேம்படும...

வாழைப்பூவின் மகத்துவம்

படம்
       வாழையின் ஒவ்வொரு பகுதியும்(பூ, இலை,காய்,கனி,தண்டு,நீர்) மனிதர்களுக்கு பெருமளவில் பயன்படும் ஒரு அற்புத மரமாகும். இதன் மருத்துவ குணங்கள் " மனிதர்களை நோய்களில் இருந்து காத்து வாழ வைக்கும் தன்மை கொண்டதால் வாழை "என்று பெயர் பெற்றது போலும். இதில் உள்ள முக்கிய வேதிப்பொருட்கள் பாஸ்பரஸ் ,கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னிசியம், இரும்புச்சத்து ..... பயன்கள்: * இயற்கையாகவே  நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. இதில் எத்தனால் ( Ethanol) இருப்பதால் இது நம் உடலில் நோய் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். * இதை உணவாக சமைத்து உண்ண பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் அதிக இரத்த போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும். *சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். *இதில் மெக்னீசியம் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்க உதவும் (antidepressant) *அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் தோன்றும் ஆபத்தைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்க பயன்படும் . *பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க உதவு...

எண்ணெய் குளியலும் அதன் பயன்களும்

படம்
     எண்ணெய் குளியல் என்பது தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பர். வாரம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில் இதனை பின்பற்றினால் நன்மைகள் பல. தேய்க்க  பயன்படும் பொருட்கள்:      நெய், எண்ணெய் ( நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய்) , மருத்துவ தைலங்கள். முறை:     எண்ணெய்யை  தலை முதல் கால் வரை சூடெழும்பாமல் தேய்க்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.காலையில் மட்டுமே எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும்.   செய்யவேண்டிய நாட்கள்:   ஆண்கள் : புதன்கிழமை & சனிக்கிழமை  பெண்கள் : வெள்ளிக்கிழமை குளிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள்: தலைக்கு  சிகைக்காய் அல்லது அரைப்பு வகைகள் பயன்படுத்தி குளிக்க வேண்டும்.   *நெய் தேய்த்தால் பச்சை பயறு மாவு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.     *எண்ணெய் / தைலம் சிகைக்காய்  பயன்படுத்தி குளிக்க வேண்டும்     *தோல் நோய்கள் இருப்பின் உசிலந்தூள் பயன்படுத்தலாம்.     *புண்கள்/காயங்...

சித்த மருத்துவம்

படம்
     சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய (traditional) மருத்துவமுறை ஆகும்.இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாகும். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே பெரும்பாலான மருந்துகள் செய்யப்படுகின்றன. மேலும் இயற்கையாக கிடைக்கும் மூலிகை, தாது பொருட்கள் மற்றும் ஜீவ பொருட்கள் கொண்டே மருந்துகள்  தயாரிக்கப்படும்.ஆகையால் இம்மருத்துவத்தால் பெருமளவில் பக்கவிளைவுகள்(side effects) கிடையாது.       சித்த மருத்துவத்தில் இரண்டு வகை மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன. அகமருந்து(internal medicine) மற்றும் புறமருந்து( external medicine)எனப்படும். அகமருந்து என்பது சூரணம், லேகியம், குடிநீர் போன்ற மருந்துகளை தக்க அனுபானத்துடன் உள்ளுக்கு சாப்பிட கொடுப்பதாகும். புறமருந்து என்பது கட்டுக்கட்டுதல் , அட்டை விடல் போன்ற வெளிப்புறம் உபயோகிக்கும் மருத்துவ முறையாகும். நாட்பட்ட நோய்களுக்கு ( chronic disease) பெரிதும் கைக்கொடுப்பது நமது சித்த மருத்துவமே....