தாம்பூலம் தரித்தல்
தாம்பூலம் தரித்தல் என்பது நம் நாட்டின் பாரம்பரியத்தில் முக்கியமான ஒன்றாகும். வெற்றிலை , பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உட்கொள்வது தாம்பூலம் எனப்படும். அவ்வாறு எடுத்துக்கொள்வதால் நாம் பெறும் நன்மைகள் பல. அதனால் தான் அக்காலம் முதல் இன்று வரை நம் நாட்டின் ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளிலும் தாம்பூலம் கொடுப்பது ஒரு வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு பெருமை வாய்ந்த இத் தாம்பூலம் எவ்வாறு மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்ப்போம். * வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு தவிர தாம்பூலத்தில் சேரும் வேறு பொருட்கள்: ஏலம் (cardamom) கிராம்பு (cloves) வால்மிலகு(tail-pepper) சாதிக்காய் (nut meg) சாதிப்பத்திரி ( mace) சுக்கு (dried ginger) காய்ச்சுக்கட்டி பயன்படுத்தப்படும் பொருட்களும் அதன் நன்மைகளும்: பொதுவாக தாம்பூலம் தரிப்பதால் கிருமி, கபம், தாகம் , பல்நோய் தீரும் என்பர். பசியை தூண்டும், சுக்கில விருத்தி உண்டாகும், நுண்ணறிவு மேம்படும...