தாம்பூலம் தரித்தல்
தாம்பூலம் தரித்தல் என்பது நம் நாட்டின் பாரம்பரியத்தில் முக்கியமான ஒன்றாகும். வெற்றிலை , பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உட்கொள்வது தாம்பூலம் எனப்படும். அவ்வாறு எடுத்துக்கொள்வதால் நாம் பெறும் நன்மைகள் பல. அதனால் தான் அக்காலம் முதல் இன்று வரை நம் நாட்டின் ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளிலும் தாம்பூலம் கொடுப்பது ஒரு வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு பெருமை வாய்ந்த இத் தாம்பூலம் எவ்வாறு மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்ப்போம்.
* வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு தவிர தாம்பூலத்தில் சேரும் வேறு பொருட்கள்:
ஏலம் (cardamom)
கிராம்பு (cloves)
வால்மிலகு(tail-pepper)
சாதிக்காய் (nut meg)
சாதிப்பத்திரி ( mace)
சுக்கு (dried ginger)
காய்ச்சுக்கட்டி
பயன்படுத்தப்படும் பொருட்களும் அதன் நன்மைகளும்:
பொதுவாக தாம்பூலம் தரிப்பதால் கிருமி, கபம், தாகம் , பல்நோய் தீரும் என்பர். பசியை தூண்டும், சுக்கில விருத்தி உண்டாகும், நுண்ணறிவு மேம்படும்.
பாக்கு:
கொட்டைப்பாக்கு - சளி நீங்கும், மலக்கட்டு தீரும் , கிருமி நீங்கும்( antimicrobial).
களிப்பாக்கு - நீண்ட நாட்காளாக மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உட்கொள்ளனலாம்.
வெறும் பாக்கு சாப்பிட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும் மேலும் பல பக்க விளைவுகள் ஏற்படுத்தும். ஆகையால் பாக்கை தனியாக உபயோகிக்க கூடாது.
வெற்றிலை:
கம்மாறு வெற்றிலை: குடற் கம்மல் , வயிற்று வலி , உப்பிசம் ஆகியவை தீரும்.
சாதாரண வெற்றிலை : காணாக்கடி, முத்தோட கபம் தீரும். வாயில் நறுமணாம் ஏற்படும்.
சுண்ணாம்பு:
கற்சுண்ணாம்பு: செரிமானம் அதிகரிக்கும், பூரான் கடி விஷத்தை குறைக்க பயன்படும், விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்கும். பற்களை உறுதிப்படுத்தும்.
முத்துச்சுண்ணம்: நீடித்த பேதி, மலக்கிருமி, வயிற்று நோய் ஆகியவை போம். மற்ற வகை சுண்ணாம்புகளை உபயோகிக்க கூடாது.
காய்ச்சுக்கட்டி : அசைவுற்ற பற்கள் இறுகும் , மலக்கிருமி அழியும்
சுக்கு ,கிராம்பு : அசீரணம் நீங்கும்
*முதல் இரண்டு முறை சுரக்கும் உமிழ்நீரை எவளியில் துப்பி விட வேண்டும் பின் 3வது, 4வது விழுங்க வேண்டும். பின் துப்ப விட வேணடும்.
**காலையில் பாக்கு சிறிது அதிகமாக சேர்க்க மலச்சிக்கல் நீங்கும்
**மதியம் உணவு உண்ட பின் சுண்ணாம்பு சிறிது அதிகமாக சேர்க்க எளிதில் செரிமானமாகும்.
(மிகவும் அதிகமாக சேர்த்தால் வாயில் புண் உண்டாகும்)
**இரவில் வெற்றிலை அதிகமாக சேர்க்க வாயில் துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
யாரெல்லாம் தாம்பூலம் தரிக்க கூடாது:
இரத்த காசம், இரத்த பித்தம், வறண்ட கண்கள், கண்கள் வீங்கிப்போதல் (உதகுப்த நேத்திரம்) க்ஷயம், விஷம், மூர்ச்சை, வெறி, சந்திபாதம், தாப சுரம், சிர நோய் ஆகியவற்றால் பாதிக்கபட்டோர் தாம்பூலம் தரிக்கக்கூடாது.

கருத்துகள்
கருத்துரையிடுக