எண்ணெய் குளியலும் அதன் பயன்களும்
எண்ணெய் குளியல் என்பது தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பர். வாரம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில் இதனை பின்பற்றினால் நன்மைகள் பல.
தேய்க்க பயன்படும் பொருட்கள்:
நெய், எண்ணெய் ( நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய்) , மருத்துவ தைலங்கள்.
முறை:
எண்ணெய்யை தலை முதல் கால் வரை சூடெழும்பாமல் தேய்க்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.காலையில் மட்டுமே எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்யவேண்டிய நாட்கள்:
ஆண்கள்: புதன்கிழமை & சனிக்கிழமை
பெண்கள்: வெள்ளிக்கிழமை
குளிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:
தலைக்கு சிகைக்காய் அல்லது அரைப்பு வகைகள் பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
*நெய் தேய்த்தால் பச்சை பயறு மாவு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
*எண்ணெய் / தைலம் சிகைக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும்
*தோல் நோய்கள் இருப்பின் உசிலந்தூள் பயன்படுத்தலாம்.
*புண்கள்/காயங்கள் இருப்பின் இலுப்பை பிண்ணாக்கு பயன்படுத்தலாம்.
சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக நலுங்குமா பயன்படுத்தி குளிக்கலாம்
பயன்கள்:
*உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகிறது.
*தோல் வறட்சி நீங்கும்.
*தலைவலி நீங்கும்.
*சோம்பல் நீங்கும்.
*பல்வேறு நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்
குறிப்புகள்:
*முடியை சிறிதும் ஈரமில்லாமல் உலர்த்த வேண்டும். அவ்வாறு சரியாக உலர்த்தாவிட்டால் தலைபாரம் , தலைவலி, சுரம் முதலியவை உண்டாகும்.
* முடிந்தால் சாம்பிராணி கொண்டு தூபம் போடலாம்.
*பகலில் உறங்கக்கூடாது.
*அதிக வெயிலில் செல்லக்கூடாது.
*உடலுறவு கொள்ளக்கூடாது.
*எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக