சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய (traditional) மருத்துவமுறை ஆகும்.இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாகும். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே பெரும்பாலான மருந்துகள் செய்யப்படுகின்றன. மேலும் இயற்கையாக கிடைக்கும் மூலிகை, தாது பொருட்கள் மற்றும் ஜீவ பொருட்கள் கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படும்.ஆகையால் இம்மருத்துவத்தால் பெருமளவில் பக்கவிளைவுகள்(side effects) கிடையாது.
சித்த மருத்துவத்தில் இரண்டு வகை மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன. அகமருந்து(internal medicine) மற்றும் புறமருந்து( external medicine)எனப்படும். அகமருந்து என்பது சூரணம், லேகியம், குடிநீர் போன்ற மருந்துகளை தக்க அனுபானத்துடன் உள்ளுக்கு சாப்பிட கொடுப்பதாகும். புறமருந்து என்பது கட்டுக்கட்டுதல் , அட்டை விடல் போன்ற வெளிப்புறம் உபயோகிக்கும் மருத்துவ முறையாகும். நாட்பட்ட நோய்களுக்கு ( chronic disease) பெரிதும் கைக்கொடுப்பது நமது சித்த மருத்துவமே....

கருத்துகள்
கருத்துரையிடுக